Wednesday, May 4, 2011

கற்றதும் பெற்றதும்

ஏறக்குறைய ஓராண்டு ஆகிவிட்டது. BeePad சரியாக விற்கவில்லை :( ஏறதாழ 640 பேர்தான் வாங்கி இருகிறார்கள். போன் சந்தையில் இது மிக மிக சொற்பமே. இது வரை நான் கற்றுக்கொண்ட விஷயங்கள் - ௧. (கூகிள் கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா ?!  எண்களை கூட தமிழாக்கம் செய்ய வேண்டுமா? ) கஸ்டமர்க்கு உடனே பதில் அளிக்க வேண்டும். நேரம் இன்மையால் நான் சரியாக பதில் அளிக்கவில்லை. கமெண்ட்ஸ் சரியாக போடவில்லை (திட்டிட்டாங்க :( ). ௨. தொடர்ந்து அப்டேட் கொடுக்க வேண்டும். அப்போதுதான் நல்ல ரேங்க் கிடைக்கும். ௩. கிராஷ் இல்லாமல் இருப்பது ரொம்ப முக்கியம். ௪. நமக்கு என்ன பிடிக்கும் என்று யோசிப்பதை விட மக்களுக்கு என்ன பிடிக்கும் என்று யோசிப்பது நல்லது. கற்ற பாடங்களை கொண்டு அடுத்த ஆப்ஸ் எழுத ஆரம்பித்து விட்டேன். முடித்ததும் சந்திப்போம்.

Sunday, January 31, 2010

ஐஃபோன் கணக்குபிள்ளை

முதலில் ஒரு சிறிய ஆப்ஸ் எழுதி விட்டு பிறகு சற்றே பெரிய ஆப்ஸ் எழுதலாம் என்று எண்ணினேன். என்ன எழுதலாம் என்று யோசித்து கொண்டிருக்கும் போது, ஐபோன் நோட்ஸில் ஒரு சிறிய குறைபாடு உள்ளது போல் தோன்றியது.  நோட்ஸ் பயன்படுத்தும் போது எண்களை கூட்டுவது சற்று கடினமாக இருந்தது. மற்றபடி நோட்ஸ் பயன்படுத்துவது மிகவும் இனிமையாக இருந்தது. மிகவும் எளிய யோசனை, நோட்ஸ் மற்றும் ஸ்ப்ரெட்சீட் இரெண்டையும் சமன் செய்து ஒரு ஆப்ஸ் எழுதுவதுதான். சற்றேறக்குறைய நான்கு மாதத்திற்கு பிறகு என்னுடைய முதல் ஆப்ஸ் Beepadஐ ஆப்ஸ் ஸ்டோர்க்கு பதிவேற்றம் செய்தேன்! 

Friday, January 22, 2010

ஐஃபோன் மென்பொருள்

ஐஃபோன் ஆப்ஸ் எழுதுவதற்கு ஆப்பிள் வலைத்தளத்தில் இருந்து Xcode மென்பொருளை பதிவிறக்கம் செய்தேன். Objective-C கணிமொழியில் Xcode மென்பொருளில் ஐஃபோன் ஆப்ஸ் எழுத வேண்டும். ஆப்பிள் வலைத்தளத்தில் ஆப்ஸ் எழுதுவதற்கு பல பல உதாரணங்கள் உள்ளன. எனவே சிறிய ஆப்ஸ் எழுதுவது மிகவும் எளிது. நாம் எழுதும் ஆப்ஸ், ஐஃபோன் மாதிரி மென்பொருளில் மட்டுமே ஓடும் ஐஃபோனில் ஓடுவதற்கு, $99 கொடுத்து பதிவு செய்ய வேண்டும். சரி இப்போ ஆப்ஸ் எழுத தயாராகியாச்சு! ஆனா என்ன எழுதலாம்? நாம செய்றத யார் வாங்குவாங்க?

Saturday, January 16, 2010

ஐஃபோன்


சமீப காலமாக என்னை ஐஃபோன் ஆட்கொண்டுவிட்டது. என்னால் ஐஃபோன் வாங்க முடியவில்லை என்பது வேறு விஷயம் :( ஐஃபோன்க்கு மென்பொருள் செய்து கோடிஸ்வரன் ஆகி விடலாம் என்பது என்னுடைய பகல் கனவு (இரவில் வரும் கனவுகள் என்னுடைய கட்டுப்பாட்டில் இல்லை). என்னுடைய கனவை மெய்பட செய்வதற்கு நான் வாங்கிய முதல் பொருள், ஐபாடு டச் (ரூ. 12000) இரண்டாவது பொருள் macbook (ரூ 56000). (மாக்-மினி ரூ 21000 இருந்து கிடைக்கிறது) இனி எப்படி என்னுடைய முதல் மென்பொருளை செய்து விற்றேன் என்று பார்க்கலாம்.

முன்னுரை

மென்பொருள் சிற்பி என்று எண்ணிக் கொள்வதில் நான் பெருமை அடைகிறேன்.
சிற்பங்கள் பல செதுக்க முயன்று, கற்கள் பல உடைத்ததுதான் மிச்சம். எனவே சிற்பங்கள் செதுக்க கற்று கொடுக்க முடியாது என்றாலும் கற்கள் உடைக்க சொல்லி கொடுக்கலாம் என்று இப்பதிவினை ஆரம்பிக்கின்றேன். உடைவது என் மண்டை ஆனாலும் வாழ்வது மென்பொருள் கலை!